TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 20 , 2025 2 days 12 0
  • சீனாவின் பெய்டைஹேயில் நடைபெற்ற ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த்குமார் வேல்குமார் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • ஹாங்சோவில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் சீன அணி இந்திய அணியினை 4–1 என்ற கணக்கில் தோற்கடித்து அதன் மூன்றாவது பட்டத்தை வென்றது.
  • சர்வேஷ் குஷாரே உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வரலாற்று ரீதியாக ஆறாவது இடத்தைப் பிடித்து அந்தப் போட்டியை எட்டிய முதல் இந்திய உயரம் தாண்டுதல் வீரரானார்.
  • இந்தியக் கடற்படையின் INS நிஸ்டார் எனும் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஆழ்கடலுக்கான ஆய்வு உதவிகரக் கப்பலானது சிங்கப்பூரில் நடைபெறும் பசிபிக் ரீச் 2025 எனும் பன்னாட்டுப் பயிற்சியில் பங்கேற்கிறது.
    • இது ஆழ்கடல் மீட்பு வாகனங்களுக்கான முதன்மை கப்பலாகச் செயல்படுகிறது என்பதோடு மேலும் பன்னாட்டு நீர்மூழ்கிக் கப்பல் மீட்புப் பயிற்சிகள் மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றங்களில் பங்கேற்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்