சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணி வேலு நாச்சியாரின் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மிக நவீன விளையாட்டு வளாகங்களில் ஒன்றான அகமதாபாத்தின் நாரன்புராவில் உள்ள வீர் சவர்க்கர் விளையாட்டு வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பெண்கள் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநராக டாக்டர் சிமா சாமி பஹூஸ் இரண்டாவது முறையாகப் பணியாற்ற உள்ளார்.
உஸ்பெக்கிஸ்தானின் சமர்க்கண்டில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு FIDE கிராண்ட் சுவிஸ் போட்டியில் அனிஷ் கிரி வெற்றி பெற்று, 2026 ஆம் ஆண்டு கேண்டிடேட்ஸ் போட்டியில் தனக்கான இடத்தைப் பிடித்தார்.
வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, "WeedOut" என்ற பெயரிலான ஒரு அடக்குமுறை நடவடிக்கையில், இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் மண்ணிலா முறையில் விளைவிக்கப்பட்ட கஞ்சா இலைகளைக் கடத்தும் சிண்டிகேட் (வணிகக் குழு) கடத்தல் குழுவினை அகற்றியது.
பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பை சுழியமாக குறைத்த நாட்டின் முதல் ஒன்றியப் பிரதேசமாக புதுச்சேரி உருவெடுத்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள சிராராகோங் கிராமத்தில் 14வது சிராராகோங் ஹாதே மிளகாய் திருவிழா தொடங்கப்பட்டது.
தனித்துவமான நறுமணம் மற்றும் அதன் சுவைக்காக பிரபலமாக அறியப்பட்ட, புவி சார் குறியீடு வழங்கப்பட்ட சிராராகோங் ஹாதே மிளகாயை மேல்தரப் படுத்துவதை இந்தத் திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது.