சீனாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உலக வேக சறுக்கு/ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார் ஆடவர்களுக்கான 42 கிலோ மீட்டர் மராத்தானில் தங்கம் வென்றார்.
முதலாவது இந்தியா-கிரீஸ் இருதரப்பு கடற்படைப் பயிற்சியானது இந்திய தரப்பில் ஐஎன்எஸ் திரிகண்ட் கப்பலின் பங்கேற்புடன் மத்திய தரைக் கடலில் நடைபெற்றது.
அகல்யா பாய் ஹோல்கரின் மரபினை கௌரவிக்கும் வகையில் மகாராஷ்டிர மாநில அகமதுநகர் இரயில் நிலையம் ஆனது அதிகாரப்பூர்வமாக அகல்யாநகர் என மறு பெயரிடப் பட்டது.
சீனாவில் நடைபெற்ற 73வது இன்லைன் ஸ்பீட் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் ஜூனியர் ஆடவர் ஒற்றைத் தட குறுவிரைவோட்ட (ஒன்-லேப் ரோடு ஸ்பிரிண்ட்) போட்டியில் அனிஷ் ராஜ் வெண்கலம் வென்றார்.
இவர் 39.714 வினாடிகளில் நிறைவு செய்து, இந்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார்.