TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 27 , 2025 13 hrs 0 min 11 0
  • ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது அரியானாவின் குருகிராமில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு மையங்களில், தேர்வுகளின் போது தேர்வர்களைப் பரிசோதிப்பதற்காக செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படுகின்ற முக அடையாள அங்கீகார முறையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • உத்தரக்காண்ட் மாநில முதல்வர் ஹால்ட்வானியில் இந்திய வாள்வீச்சு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் சர்வதேச வாள்வீச்சுப் போட்டியை தொடங்கி வைத்தார்.
  • முன்னாள் தலைமை நீதிபதி D.Y. சந்திரசூட், அன்றாட இந்திய வாழ்க்கையை வடிவமைப்பதில் அரசியலமைப்பு விழுமியங்களின் திறன் குறித்து ஆராயும் "Why the Constitution Matters" என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • நெருக்கமான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதிலும், இந்தியா-ஐக்கியப் பேரரசு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை (FTA) அடைவதிலும் பங்காற்றியதற்காகப் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு 'Living Bridge' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்