ஐரோப்பாவின் வளமான மொழியியல் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தினை கொண்டாடும் வகையில் 2001 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 26 ஆம் தேதியன்று ஐரோப்பிய மொழிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகின் அனைத்து மொழிகளிலும் சுமார் 3% பங்குடன், ஐரோப்பாவில் தோராயமாக 225 பூர்வீக மொழிகள் உள்ளன.
அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அவற்றை ஒழிப்பதை ஊக்குவிப்பதற்காகவும், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதியன்று அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது அனுசரிக்கப் படுகிறது.