இந்திய நாடானது 12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் (2025) போட்டியினை முதல் முறையாக செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 05 ஆம் தேதி வரையில் புது டெல்லியில் நடத்தி வருகிறது.
கூகுள் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியன்று தனது 27வது உருவாக்கத் தினத்தினைக் கொண்டாடியது.
மாற்றிக் கொள்ளும் வகையிலான மின் கலங்கள் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார கனரக சரக்குந்துகள் ஆனது நவி மும்பையில் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் (JNPA) கொடியசைத்து தொடங்கி வைக்கப் பட்டன.
நிகழ்நேர கூட்டக் கணிப்பு மற்றும் விரைவான வரிசை மேலாண்மையினை வழங்குவதற்காக, திருமலையில் பக்தர்/யாத்ரீகர்களுக்கான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்தக் கட்டளை வழங்கீட்டு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, செயற்கை நுண்ணறிவு, திறன் கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு மையமாக இந்திய அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஆசிய நீர்நிலை சாகச சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளானது அகமதாபாத்தில் உள்ள புதிதாக திறக்கப்பட்ட வீர் சவர்க்கர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.
HSBC ஆனது IBM நிறுவனத்துடன் இணைந்து பெரு நிறுவனங்கள் பத்திரச் சந்தையில் குவாண்டம் / துளிமக் கணினி மூலம் இயக்கப்பட்டப் படிமுறை வர்த்தகத்தினைச் செயல் விளக்கிக் காட்டியுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஸ்ரீ விவேகானந்த் குப்தா, 2025–26 ஆம் ஆண்டிற்கான பொது நிதி சொத்து மேலாண்மை (PFAM) திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
PFAM திட்டம் ஆனது உலக வங்கி மற்றும் மில்கென் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த ஒரு மதிப்புமிக்க முன்னெடுப்பாகும்.
மும்பையைச் சேர்ந்த ஜினாலி மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் (UNEP) 2025 ஆம் ஆண்டிற்கான புவியின் சிறந்த இளம் சாதனையாளர் விருதை வென்றுள்ளார்.
கென்யாவைச் சேர்ந்த ஜோசப் நுகுதிரு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நோமி ஃப்ளோரியா ஆகியோர் இந்த விருதை வென்ற மற்ற வீரர்கள் ஆவர்.