துபாய் உலக தானியக்கப் போக்குவரத்து மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகமானது தனது முதல் சாவரைன் மொபிலிட்டி மேகக் கணிம அமைப்பினை வெளியிட்டது.
மைசூரு பகுதியைச் சேர்ந்த மூத்தப் பத்திரிகையாளர் அம்சி பிரசன்னகுமார், 2025 ஆம் ஆண்டு ஹோம்பலே சம்ஹிதா ஹரிணிகுமார் முன்னாள் மாணவர் கிரிஷி மீடியா விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பூடானின் முதல் இரயில்வே இணைப்பானது இந்தியாவிற்கும் பூடானுக்கும் இடையிலான 69 கிலோ மீட்டர் கோக்ரஜார்-கெலேபு இரயில் பாதையானது, 1989 ஆம் ஆண்டு இரயில்வே சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு இரயில் திட்டமாக நியமிக்கப் பட்டு உள்ளது.
40 பேர் உயிரிழந்த TVK பேரணியில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஓர் உறுப்பினர் கொண்ட குழு விசாரணைக்குத் தலைமை தாங்க நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமித்தது.
இந்தியத் தாவரவியல் ஆய்வு மையத்தின் (BSI) 13வது இயக்குநராக கனத் தாஸ் நியமிக்கப் பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) கீழ் உள்ள முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தினை வழிநடத்தும் முதல் பூஞ்சையியல் வல்லுநர் இவரே ஆவார்.