TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 2 , 2025 3 days 30 0
  • ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, கடல்சார் அந்தமான் தொகுதியில் முதற் கட்டச் சோதனைகளில் 87% மீத்தேன் உடன் இடைநிலை எரிவாயு உள் பாய்வினைக் கொண்ட இயற்கை எரிவாயுவைக் கண்டறிந்துள்ளது.
  • மூத்த வழக்கறிஞர் R. வெங்கடரமணி 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் அரசுத் தலைமை வழக்குரைஞராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இலங்கையில் கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் 17 வயதுக்குட்பட்டோருக்கான (SAFF U-17) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தனது ஏழாவது பட்டத்தை வென்றது.
  • இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்தப் புற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் நல மையம் கோவாவின் தர்கல் எனுமிடத்தில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் திறக்கப் பட்டது.
  • C-DOT (தகவல் தொடர்பு மேம்பாட்டு மையம்) உருவாக்கிய 5G இணைப்பிற்குத் தயாரான கட்டமைப்புடன் கூடிய முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதன் முதல் 4G வலையமைப்பினை இந்தியா அறிமுகப்படுத்தியது.
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் ஆனது, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இந்தியக் கப்பல் தொழில்நுட்ப மையத்தை (ISTC) திறந்துள்ளது.
    • ISTC ஆனது உள்நாட்டுக் கப்பல் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதோடு, ஓர் ஒற்றைச் சாளரச் சேவையாக ஆலோசனை வழங்கீடு, பயிற்சி மற்றும் கொள்கை ஆதரவு ஆகியவற்றினை வழங்குகிறது.
  • இந்தியா மாற்றுத் திறனாளிகளுக்கான 12வது உலகத் தடகள சாம்பியன்ஷிப் (2025) போட்டியினை புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடத்துகிறது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி என்பது மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு அடுத்தபடியான இரண்டாவது பெரிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்வாகும் என்பதோடு மேலும் இந்தியா இப்போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • அமைச்சரவையின் நியமனக் குழு, இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஷிரிஷ் சந்திர முர்முவை மூன்று ஆண்டுகளுக்கு அதன் துணை ஆளுநராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்திய ரிசர்வ் வங்கியில் தற்போது M. ராஜேஷ்வர் ராவ், T. ரபி சங்கர், J. சுவாமிநாதன், மற்றும் பூனம் குப்தா ஆகிய நான்கு துணை ஆளுநர்கள் உள்ளனர்.
  • இந்திய இராணுவம் ஆனது செப்டம்பர் 28 ஆம் தேதியன்று 199வது பீரங்கி கையாளுநர் (கன்னர்ஸ்) தினத்தைக் கொண்டாடுகிறது.
    • 1827 ஆம் ஆண்டில் பீரங்கி படைப் பிரிவை அலகு-5 (பம்பாய்) மலைப் பாங்கான பகுதிகளில் செயல்படுவதற்கான படைப் பிரிவாக உயர்த்தியதை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்