மத்தியப் புலனாய்வுப் பிரிவானது (CBI), சர்வதேச இணையவெளி சார்ந்த நிதிக் குற்றங்களை இலக்காகக் கொண்ட சர்வதேச காவல் துறையின் HAECHI-VI நடவடிக்கையில் எட்டு முக்கியச் செயல்பாட்டாளர்களை கைது செய்து சந்தேகத்திற்கிடமான 45 நபர்களை அடையாளம் கண்டுள்ளது.
ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகத்தினை (UPI) இயக்கும் NPCI (இந்திய தேசியக் கொடுப்பனவு கழகம்) ஆனது PayPal நிறுவனத்துடன் ஒருங்கிணைந்த முதல் பண வழங்கீட்டு அமைப்பு சார் பங்குதாரராக மாறியுள்ளது.
1932 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 08 ஆம் தேதியன்று இந்தியா அதன் 93வது விமானப்படை தினத்தைக் கொண்டாடியது.