இந்தியாவின் முதல் வணிகப் பயன்பாட்டு மின்சார சரக்குந்து மின்கல மாற்றுதல் மற்றும் மின்னேற்ற நிலையமானது ஹரியானாவின் சோனிபட்டில் திறக்கப்பட்டது.
மும்பை ஒன் என்பது நிகழ்நேரத் தகவல் புதுப்பிப்புகள், கைபேசி வழி பயணச் சீட்டுகள் மற்றும் மெட்ரோ, இரயில் மற்றும் பேருந்துகளுக்கான ஒற்றை டிஜிட்டல் நுழைவு மூலம் 11 பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் முன்பதிவு செய்ய உதவும் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்தப் போக்குவரத்து செயலியாகும்.
ஷெர்ரி சிங் பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற திருமதி பிரபஞ்சப் பேரழகி 2025 போட்டியில் இந்தியப் போட்டியாளர் வெற்றி பெற்றதுடன் இந்தியா தனது முதல் வெற்றியை இதில் பெற்றது.