சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய அலங்கார மீன் சந்தை வளாகத்தைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
பென்சில்வேனியா மற்றும் கனெக்டிகட் ஆகியவற்றிற்குப் பிறகு, கலிபோர்னியா மாகாணமானது தீபாவளியை மாகாண விடுமுறை தினமாக அறிவித்து அவ்வாறு அறிவித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாக மாறியுள்ளது.
விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்து உரை ஆற்றிய இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு நாடுகளின் பிரதமர்கள் உலகளாவிய அமைதி, உறுதித்தன்மை மற்றும் விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கிற்கான பொதுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.