தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவப் பட்டதாரி சக்தி ஜெய சுந்தர் இராஜசேகர், 10வது BRICS இளம் அறிவியலாளர்கள் மன்றத்தின் போது பிரேசிலில் நடைபெற்ற BRICS இளம் கண்டுபிடிப்பாளர் பரிசு வழங்கீட்டு விழாவில் இரண்டாம் பரிசினை வென்றார்.
இந்திய கடலோரக் காவல்படையின் (ICG) கர்நாடகப் பிரிவானது, பெருங்கடல் பரப்பில் பெருமளவிலான மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் தயார் நிலையைச் சோதிப்பதற்காக, மங்களூருவின் பனம்பூர் கடற்கரையில் பிராந்தியத் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியை (ReSAREX-25) நடத்தியது.
வளர்ந்து வரும் நாடுகளில் பள்ளி உணவுத் திட்டங்களை ஆதரிப்பதற்காக 2009 ஆம் ஆண்டு மேரிஸ் மீல்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தினால் தொடங்கப்பட்ட உலக கஞ்சி தினமானது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
முட்டைகளின் ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் அவற்றின் பங்கை எடுத்துக்காட்டும் வகையில், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று உலக முட்டை தினம் அனுசரிக்கப்படுகிறது.