TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 17 , 2025 14 days 63 0
  • ஐதராபாத்தில் உள்ள கோண்டாபூரில் தொழில்நுட்ப சில்லு புத்தாக்கத் திட்டத்தின் (T-Chip) மூலம் இந்தியாவின் முதல் குறைகடத்தி நுட்பம் சார் புத்தாக்க அருங்காட்சியகமானது திறந்து வைக்கப்பட்டது.
  • அமெரிக்காவின் தலைமையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பு டோக்முஷ் குலத்தைச் சேர்ந்த 52 போராளிகளை வன்முறையின் நடவடிக்கையில் கொன்றது.
  • ஷாருக்கான் 1.4 பில்லியன் டாலர் (12,490 கோடி ரூபாய்) நிகரச் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார நடிகர் என்றப் பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • ஜப்பானிய நகரமான டோயோகே, அந்நாட்டு மக்களின் குடிமக்களின் திரைப் பயன்பாட்டு நேரத்தை ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாகக் கட்டுப்படுத்தும் ஒரு உள்ளூர் அவசரச் சட்டத்தினை இயற்றியுள்ளதன் மூலம், திறன் பேசிகளின் சார்பு நிலையைக் குறைப்பதை அதிகாரப்பூர்வமாக ஊக்குவிக்கும் முதல் நகரமாக மாறி உள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள ஒன்பது முக்கிய நிறுவனங்கள் பாதுகாப்பான, ஒன்றோடொன்று இணைந்து இயங்கக் கூடிய மற்றும் சமமான 6G சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான டெல்லி பிரகடனம் எனப்படும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மௌசம் திட்டத்தின் கீழ் நகர்ப்புற சோதனைத் தளம் திறக்கப்பட்டது.
    • புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (IITM) ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்தத் தளமானது, நிகழ்நேர வானிலைக் கண்காணிப்புக்கான கருவிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்