இந்தியக் கடற்படையானது விசாகப்பட்டினத்தில் இந்தோனேசிய இருதரப்பு கடல்சார் பயிற்சியான 5வது “சமுத்திர சக்தி–2025” என்ற பயிற்சியினை நடத்துகிறது.
பார்வைத் திறனற்றோர் மற்றும் பார்வைத் திறன் குறைபாடு உள்ளோரின் சுதந்திரம், இயக்கம்/நடமாட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று உலகப் பார்வைத் திறனற்றோர் கைத்தடி (வெண்பிரம்பு) தினம் அனுசரிக்கப்படுகிறது.
சோப்பு மற்றும் தண்ணீரில் கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதியன்று உலகளாவிய கை கழுவுதல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Be a Handwashing Hero!” என்பது ஆகும்.