TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 23 , 2025 8 days 67 0
  • IUCN அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஆனது, இந்திய வனவிலங்கு வளங்காப்பு நிபுணர் விவேக் மேனனை IUCN இனங்களின் உயிர் பிழைத்தல் ஆணையத்தின் (SSC) 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்திற்கான புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளன.
  • 50 சுற்றுலாத் தலங்களை உலகளாவிய தரநிலைகளில் மேம்படுத்துவதற்கான தேசிய முன்னெடுப்பின் கீழ், நாகாலாந்து அரசானது மாநிலத்தின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக ட்சுகோ பள்ளத்தாக்கினை முன்மொழிந்துள்ளது.
  • சண்டிகரில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் விழாவிற்கான (IISF) தொடக்க விழாவினை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மத்திய இணை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • ஐதராபாத் மலையேறும் வீரர் பரத் தம்மினேனி, மலையேறுவதற்கான அணுகல் உள்ள ஒன்பது 8,000 மீட்டர் சிகரங்களையும் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • ஆளில்லா வான்வழி அமைப்புகள் (UAS) அல்லது ஆளில்லா விமானங்கள் மூலமாக வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய இலக்குகளை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இந்தியாவும் முதன்முறையாக தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தின.
  • தருண் கார்க் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) நிறுவனத்தின் முதல் இந்திய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்