இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், திறன்களை மேம்படுத்துவதற்காகவும், சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்தோ-பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தினை ஊக்குப்பதற்காகவும் கியூஷு மற்றும் யோகோசுகா (ஜப்பான்) கடல் பகுதியில் ஜப்பான் - இந்தியா கடல்சார் பயிற்சி 2025 (JAIMEX 25) என்ற பயிற்சியினை நடத்தின.
கோவாவின் பனாஜியில் நடைபெற்ற ஒரு கலாச்சார விழாவில் 2025 ஆம் ஆண்டு FIDE சதுரங்க உலகக் கோப்பைப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ முத்திரை மற்றும் கீதத்தை இந்தியா வெளியிட்டது.
உலக கோப்பைப் போட்டிகளானது, வடக்கு கோவாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
2009 ஆம் ஆண்டு முதல், மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்ளும் பெண்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அதை எதிர்கொள்பவர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 18 ஆம் தேதி அன்று உலக மாதவிடாய் நிறுத்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Lifestyle Medicine in Menopausal Health" என்பதாகும்.
ஒவ்வோர் ஆண்டின் அக்டோபர் மாதத்திலும், இயங்கலையில் பாதுகாப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக தேசிய இணையவெளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் (NCSAM) ஆனது உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில், 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, பாதுகாப்பான இணையவெளி கொண்ட இந்தியா என்று பொருள்படும் “Cyber Jagrit Bharat” என்பது ஆகும்.