TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 27 , 2025 4 days 52 0
  • சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH) ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைக் குழுவானது 28 வயது இளைஞருக்கு கை குறுக்கு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
    • இது போன்ற அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவது இது முதல் முறை மற்றும் இந்தியாவில் இரண்டாவது முறையாகும், மேலும் உலகளவில் பதிவான நான்காவது இத்தகைய அறுவை சிகிச்சை இது கும்.
  • சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் புதுப்பிக்கப்பட்ட 58 ஏக்கர் பரப்பளவிலான தொல்காப்பியப் பூங்காவை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் யேல் பல்கலைக்கழக பேராசிரியருமான சுனில் அம்ரித், தனது "The Burning Earth: An Environmental History of the Last 500 Years" படத்திற்காக 2025 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் அகாடமி புத்தக பரிசை வென்றுள்ளார்.
  • ஸ்பெயினின் காண்டோ விமான தளத்தில் ஸ்பெயின் விமானப்படை நடத்தும் பன்னாட்டு விமானப் போர் பயிற்சியான ஓஷன் ஸ்கை 2025 பயிற்சியில் இந்திய விமானப் படை (IAF) பங்கேற்கிறது.
    • இதில் பங்கேற்கும் முதல் நேட்டோ அல்லாத நாடு இந்தியா ஆகும்.
  • கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தினால் கட்டமைக்கப் பட்ட குறைவான ஆழம் கொண்ட பகுதியில் இயங்கும் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல்களில் (ASW SWC) முதலாவதான 'மாஹே', இந்தியக் கடற் படையிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்