TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 29 , 2025 15 hrs 0 min 21 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது (ICG), கடலோர ரோந்து, மீன்வளப் பாதுகாப்பு, கடத்தல் எதிர்ப்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ICG கப்பல் அஜித் மற்றும் ICG கப்பல் அபராஜித் ஆகிய இரண்டு விரைவு ரோந்து கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கேரள மாநில அரசானது, அரபிக் கடலுக்கு அடியில் வைப்பின் மற்றும் கொச்சி துறைமுகத்தினை இணைக்கும் 2.75 கி.மீ தூர கடலடிச் சுரங்கப்பாதையை அமைக்க உள்ளது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுனில் அம்ரித், The Burning Earth: An Environmental History of the Last 500 Years என்ற புத்தகத்திற்காக 2025 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசை வென்றுள்ளார்.
  • இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
  • கங்கை நதியில் 57–70 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பஜ்ரங் சேது எனும் இந்தியாவின் முதல் 132 மீட்டர் தூர கண்ணாடி தொங்கு பாலமானது விரைவில் திறக்கப் பட உள்ளது.
  • 1962 ஆம் ஆண்டில் இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) நிறுவப்பட்டதை நினைவு கூரும் விதமாகவும், இந்தியாவின் வடக்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் அதன் சேவையை கௌரவிக்கும் விதமாகவும், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை உருவாக்க தினமானது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்ற 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் (2025) இந்திய ஆடவர் கபடி அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
    • சென்னையைச் சேர்ந்த R. கார்த்திகா துணை அணித் தலைவராக செயலாற்றிய 18 வயதிற்குட்பட்ட மகளிர் அணி, ஈரான் அணியை வீழ்த்தி மகளிர் கபடி அணிக்கான தங்கப் பதக்கத்தை வென்றது.
  • சர்வதேச உறவுகளில் ஈடுபட்டுள்ள உலகெங்கிலும் உள்ள அர்ப்பணிப்பு மிக்க தூதர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று சர்வதேச தூதர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலகளாவிய மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று உலக மேம்பாட்டு தகவல் தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: "Harnessing Knowledge Sharing for Global Development" என்பதாகும்.
  • நமது கலாச்சார மற்றும் கூட்டு நினைவகத்தின் முக்கியப் பகுதியாக ஒலி-ஒளி ஆவணங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 27 ஆம் தேதியன்று உலக ஒலி-ஒளி பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "A Window to the World" என்பது ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்