வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது, ஐக்கியப் பேரரசிற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்துப் புவிசார் குறியீடு பெற்ற இண்டி மற்றும் புளியங்குடி எலுமிச்சை சரக்குகளை முதன்முறையாக விமானம் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளது.
பயணிகள் கப்பலான 'சிந்து' இந்தியாவின் ஒரே செயலில் உள்ள எரிமலையான பாரன் தீவிற்கான தனது முதல் பயணத்தை நிறைவு செய்து, அந்தமானில் போர்ட் பிளேயரில் உள்ள ஹாடோ வார்ஃப் துறைமுகத்திற்கு திரும்பியது.