மெலிசா புயல் ஆனது 5வது வகை புயலாக ஜமைக்காவைத் தாக்கி, கடுமையான சேதத்தை ஏற்படுத்தி, கியூபா மற்றும் பஹாமாஸை நோக்கி நகர்ந்துள்ள.
இந்தியக் கடற்படையானது, ஆய்வுக் கப்பல் (பெரிய) உற்பத்தித் தொடரில் மூன்றாவது கப்பலும் மற்றும் பெண் பணியாளர்களுக்கு பிரத்யேக தங்குமிட வசதியைக் கொண்ட முதல் கப்பலான இக்சக் என்ற ஆய்வுக் கப்பலை கொச்சி கடற்படை தளத்தில் படையில் இணைக்க உள்ளது.
இந்தியா தனது வருடாந்திர திரிசூல் 2025 பயிற்சியை பாகிஸ்தானுடனான அதன் மேற்கு எல்லையில் தொடங்கியுள்ளது என்ற நிலையில், இதில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை கூட்டுப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவின் ஜூனியர் கலப்பு அணியானது, அசாமின் கௌஹாத்தியில் நடைபெற்ற சுஹந்தினாதா கோப்பையில் நடைபெற்ற BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் கலப்பு - அணிப் போட்டியில் முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் முதல் முறையாக மூன்று இடங்களுள் இடம் பெற்றது.
இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர்களான D. குகேஷ் மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் 2025 ஆம் ஆண்டு ஐரோப்பிய சதுரங்க கிளப் கோப்பை போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
உலகின் வயதான அதிபர் பால் பியா, அவரது 92வது வயதில் கேமரூனில் மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டொனால்ட் டிரம்ப் தென் கொரியாவின் மிக உயரிய தேசிய விருதான கிராண்ட் ஆர்டர் ஆஃப் முகுங்வாவைப் பெற்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஆப்பிள் நிறுவனமானது அதிகமான ஐபோன் விற்பனையில் 4 டிரில்லியன் டாலர் வருவாயை எட்டியது அதே நேரத்தில் என்விடியா நிறுவனம் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான AI சில்லு விற்பனைகளுடன் 5 டிரில்லியன் டாலர் வருவாய் அளவினை நெருங்குகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை (IAF) நிலையத்திலிருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
ரஃபேல் மற்றும் சுகோய் Su-30MKI ஆகிய இரண்டு வெவ்வேறு IAF போர் விமானங்களில் பயணித்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற பெருமையினை அவர் பெற்றுள்ளார்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆனது, மும்பையில் 2025 ஆம் ஆண்டு இந்தியக் கடல்சார் வாரத்தின் போது தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (NMHC) அதிகாரப்பூர்வ முத்திரையினை வெளியிட்டது.
இந்தியாவின் கடல்சார் வரலாற்றைப் பாதுகாப்பதற்காகவும் காட்சிப் படுத்தச் செய்வதற்காகவும், உலகின் பழமையான கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றான குஜராத்தின் லோத்தலில் NMHC நிறுவப்பட உள்ளது.
இந்திய அரசானது, ஆசிய-பசிபிக் விபத்து புலனாய்வுக் குழு (APAC-AIG) கூட்டத்தை புது டெல்லியில் நடத்தியது.
இந்த நிகழ்வை பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான விபத்து புலனாய்வு வாரியம் (AAIB) ஏற்பாடு செய்தது.