TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 5 , 2025 22 days 119 0
  • இந்திய இராணுவமானது, தெற்குப் படைப் பிரிவின் கீழ் உள்ள பாலைவனப் பகுதியில் 'வாயு சமன்வய்-II' என்ற ஒரு பெரிய ஆளில்லா விமான மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்புப் பயிற்சியை நடத்தியது.
  • லிதுவேனிய-உக்ரேனிய எழுத்தாளர் ஜரோஸ்லாவாஸ் மெல்னிகாஸ் எழுதிய 'Antim Din' (இந்தியில்) என்ற புகழ்பெற்ற லிதுவேனிய புதினத்தின் இந்தி மொழிபெயர்ப்பை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது.
  • பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 120 கோடி ரூபாய் மதிப்பில் கம்பிவடத் தொங்கூர்தி திட்டத்திற்கு தேசியப் புலனாய்வு முகமை (NIA) ஒப்புதல் அளித்துள்ளது.
  • பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய பழங்குடியின வீரர்களின் வீரம் மற்றும் தியாகங்களைக் காட்சிப்படுத்தும் வகையில், பழங்குடியினச் சுதந்திர வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம் ஆனது சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில் நிறுவப்பட்டுள்ளது.
  • பிரதமர் நவ ராய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் புதியக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
  • மெக்ஸிகோ நகரம் ஆனது, வண்ணமயமான உடைகள், மிதவைகள் (காட்சி வாகனங்கள்) மற்றும் பாரம்பரியப் பிரசாதங்களுடன் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் பங்கேற்ற 2025 ஆம் ஆண்டிற்கான அதன் இறந்தோர் நாள் அணி வகுப்பை நடத்தியது.
  • புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கியக் காரணமாக உள்ள நுரையீரல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நுரையீரல் புற்றுநோய் மாதம் ஆனது உலகளவில் நவம்பர் மாதம் அனுசரிக்கப்படுகிறது.
  • நனி சைவம் அடிப்படையிலான வாழ்க்கை முறைகள் மற்றும் விலங்கு நலனை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 01 ஆம் தேதியன்று உலக நனி சைவ தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Celebrating 80 Years of Vegan Living" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்