"The Last Day" எனும் புகழ்பெற்ற லிதுவேனிய புதினத்தின் இந்தி மொழி பெயர்ப்பை சாகித்ய அகாடமி புது டெல்லியில் வெளியிட்டது.
இந்தப் புதினத்தினை லிதுவேனிய-உக்ரைனிய எழுத்தாளர் ஜரோஸ்லாவாஸ் மெல்னிகாஸ் எழுதியுள்ளார்.
தஜிகிஸ்தானுடனான இருதரப்பு ஒப்பந்தம் ஆனது சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியானதையடுத்து, தஜிகிஸ்தானில் உள்ள அய்னி விமானப் படைத் தளத்தில் இந்தியா தனது இராணுவ இருப்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
தொலைதூர மற்றும் பின்தங்கியப் பகுதிகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையினை வழங்க ஸ்டார்லிங் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் திகழ்கிறது.