TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 9 , 2025 18 days 56 0
  • உலகின் மிகப்பெரிய 25 முதல் 27 செ.மீ இறக்கைகள் கொண்ட அரிய வகை அட்லஸ் அந்துப்பூச்சியானது, சமீபத்தில் கர்நாடகாவின் கார்வாரில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்பட்டது.
  • இந்தியாவில் பிறந்த கசலா ஹாஷ்மி விர்ஜீனியாவின் துணை நிலை ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தப் பதவியை வகிக்கும் முதல் தெற்காசிய அமெரிக்க மற்றும் இந்திய வம்சாவளிப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • 2025 ஆம் ஆண்டு ஹுருன் பெருந்தகைமை பட்டியலின் படி, ஆண்டிற்கு 2,708 கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகளுடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்காவது முறையாக, சிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவின் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, குஜராத்தின் வல்சாத்தில் செயல்பட்டு வந்த பல மாநில போதைப்பொருள் வலையமைப்பை "ஒயிட் கோல்ட்ரான் நடவடிக்கையின்" கீழ் அகற்றியுள்ளது.
  • தாலிபான் அரசாங்கம் ஆனது, இந்த மாதம் இந்தியாவில் தனது முதல் தூதரை நியமிக்க உள்ளது, இது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காபூலைக் கட்டுப்பாட்டில் எடுத்ததிலிருந்து அதன் முதல் அதிகாரப்பூர்வ ஆப்கானியத் தூதர் நியமனத்தைக் குறிக்கிறது.
  • அமெரிக்க அரசாங்க முடக்கம் ஆனது, 36 நாட்களை எட்டியுள்ளது, இது இதற்கு முன்னதாக பதிவான முடக்கத்தினையும் கடந்துள்ளது மற்றும் 1.4 மில்லியன் தொழிலாளர்களைப் பாதித்து 14 பில்லியன் டாலர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
  • ஈராக் போர் மற்றும் 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய "war on terror - தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை" ஆகியவற்றின் முக்கியச் சிற்பியுமான/நபருமான அதிபர் ஜார்ஜ் W. புஷ் தலைமையின் கீழ் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க துணை அதிபர் டிக் செனி சமீபத்தில் காலமானார்.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் தேதியன்று மசார்-இ-ஷெரீஃப் அருகே வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட  6.3 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தால் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்