ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டி - நிலை 3 என்ற சர்வதேசப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய மாற்றுத் திறனாளித் தடகள வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்று உள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலமானது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து (MeitY) "People First Integration Award" என்ற விருதினைப் பெற்று உள்ளது.
இந்திய சதுரங்க வீரர் V. S. ராகுல் 6வது ஆசியான் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதையடுத்து நாட்டின் 91வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
சீனாவின் 3வது மற்றும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட முதல் விமானந் தாங்கி கப்பலான ஃபுஜியன், விரிவான கடல் சோதனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக படையில் இணைக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் மியாவோவில் உள்ள நம்தாபா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் வளங்காப்பகத்தில் (NNP &TR) 8வது நம்தாபா வண்ணத்துப் பூச்சி திருவிழா ஏற்பாடு செய்யப்பட உள்ளது.