கிரண் தேசாயின் "The Loneliness of Sonia and Sunny" என்ற புத்தகம் ஆனது புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனமானது, விண்வெளியில் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் தரவு மையங்களை உருவாக்குவதற்காக சன்கேட்சர் திட்டம் என்ற ஓர் இலட்சிய மிக்க ஆராய்ச்சி முன்னெடுப்பினை அறிவித்துள்ளது.
இது புவியின் ஆற்றல் மற்றும் நீர் நுகர்வைக் குறைக்க விண்வெளியில் AI தரவு மையங்களை வழங்குகின்ற சூரிய சக்தியில் இயங்கும் செயற்கைக்கோள்கள் ஆகும்.
நிலையான மற்றும் வாழக்கூடிய நகரங்களுக்கான நகர்ப்புற மற்றும் பிராந்தியத் திட்டமிடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், நவம்பர் 08 ஆம் தேதி அன்று உலக நகரத் திட்டமிடல் தினம் என்றும் அழைக்கப்படுகின்ற உலக நகரமய மாக்கல் தினம் அனுசரிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "With Planning We Can" என்பதாகும்.