இந்தியா-அங்கோலா உறவுகளின் 40 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில், எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக, அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவிற்கான இந்தியாவின் முதல் அரசு முறை பயணத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி உள்ளார்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆனது புது டெல்லியில் 2025 ஆம் ஆண்டு சர்வதேச பசுமை ஹைட்ரஜன் மாநாட்டை நடத்த உள்ளது.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிப்பது, உள்கட்டமைப்பை செயல்படுத்துவது, தேவையை உருவாக்குவது மற்றும் உலகளாவியப் பெரும் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வதுபோன்ற சிலவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
வடக்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாமில் பலதரப்பு கடற்படைப் பயிற்சியான மலபார் 2025 பயிற்சி நடைபெற்று வருகிறது.
இந்தியா சார்பாக ஐஎன்எஸ் சஹ்யாத்ரி எனும் ரேடாருக்குப் புலப்படாத வழிக் காட்டப்பட்ட எறிகணை போர்க்கப்பல் பங்கேற்கிறது.
எகிப்தியப் பெட்ரோலியம் மற்றும் கனிம வளத் துறை அமைச்சகமானது, மேற்கு பாலைவனத்தின் பத்ர்-15 பகுதியில் ஒரு புதிய இயற்கை எரிவாயுவைக் கண்டறிந்து உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு, கீழ்மட்ட பஹாரியா நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்பட்ட எகிப்தின் எரிவாயு இருப்புக்கு தோராயமாக சுமார் 15 பில்லியன் கன அடி அளவில் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.