TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 14 , 2025 3 days 11 0
  • 2027 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) கீழான 32வது பங்குதாரர்கள் மாநாட்டை (COP32) எத்தியோப்பியா நடத்த உள்ளது.
    • ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டை ஏற்பாடு செய்யும் முதல் கிழக்கு ஆப்பிரிக்க நாடு இதுவாகும்.
  • இந்திய ஆயுதப் படைகளின் கிழக்குப் படைப் பிரிவானது, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மெச்சுகாவில் பூர்வி பிரசாந்த் பிரஹார் எனும் முப்படைப் பயிற்சியை நடத்தியது.
  • ஹங்கேரிய-பிரிட்டிஷ் எழுத்தாளரான டேவிட் சலாய், "Flesh" என்ற அவரது ஆறாவது புதினத்திற்காக 2025 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை வென்றார்.
  • இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 11வது மித்ர சக்தி 2025 பயிற்சியானது கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.
  • கெய்ரோவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் (ISSF) உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் சாம்ராட் ராணா தங்கம் வென்றார்.
    • இதன் மூலம், தனிநபர் ஏர் பிஸ்டல் உலகப் போட்டியில் பட்டத்தை வென்ற முதல் இந்தியத் துப்பாக்கி சுடும் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதி முதல் பதவிக்கு வரும் வகையில், சர்வதேச ஆட்டோமொபைல்ஸ் (வாகன உற்பத்தி) அமைப்பின் (OICA) தலைவராக ஷைலேஷ் சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • உலகளாவிய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பிற்குத் தலைமை வகிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்