வியட்நாம்-இந்தியா இடையிலான 6வது இருதரப்பு இராணுவப் பயிற்சியானது (VINBAX) வியட்நாமின் ஹனோயில் நடைபெற்றது.
புவனேஸ்வரின் கலிங்கா மைதானத்தில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முதலாவது தேசிய உள்ளரங்க தடகளச் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட உள்ளது.
10GW திறன் கொண்ட சூரிய மின் கலங்கள் மற்றும் கம்பிச் சில்லுகள் (இங்காட்) உற்பத்தி மையத்தினை அமைக்க டாடா பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தெலுங்கானா அரசானது, ஐதராபாத்தில் தெலுங்கானா செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையத்தை (TAIH) நிறுவியுள்ளது.
இந்தூரில் பிறந்த பாடகி பாலக் முச்சால் தனது அசாதாரண மனிதாபிமானப் பணிகளுக்காக கின்னஸ் புத்தகத்திலும் லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
அமைதி மற்றும் மனிதாபிமானத் தலைமைக்கான உலகளாவிய பங்களிப்புகளுக்காக குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு பாஸ்டன் உலக மன்றம் (BGF) மற்றும் செயற்கை நுண்ணறிவு உலக சங்கம் (AIWS) ஆகியவற்றால் 2025 ஆம் ஆண்டிற்கான அமைதி மற்றும் பாதுகாப்புக்கான உலக தலைவர் விருது வழங்கப் பட்டது.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (IISc) இணைப் பேராசிரியர் டாக்டர் சாய் கௌதம் கோபாலகிருஷ்ணனுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான மனோகர் பாரிக்கர் யுவ விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது.
வடக்கு காசா பகுதிக்குள் நுழைவதற்கான முக்கிய நுழைவுப் பகுதியான ஜிகிம் கடப்புப் பகுதியானது, அப்பகுதிக்குள் மனிதாபிமான உதவிகள் வருவதை அனுமதிக்க இஸ்ரேலால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டில் உலக கருணை இயக்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, நவம்பர் 13 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்ற உலக கருணை தினம் ஆனது, உலகளாவியத் தன்னுணர்வு, தாராள மனப்பான்மை மற்றும் கூட்டுறவு நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது.