TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 20 , 2025 7 days 61 0
  • கோரமண்டல் இன்டர்நேஷனலின் ஓய்வு பெற்ற தலைவரும் முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான அருணாச்சலம் வெள்ளையன் சென்னையில் காலமானார்.
  • இந்தியா 2026 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து அதன் வருடாந்திர LPG இறக்குமதியில் சுமார் 10 சதவீதத்தினை உள்ளடக்கிய 2.2 மில்லியன் டன் LPG வாயுவை இறக்குமதி செய்வதற்கான கட்டமைக்கப்பட்ட முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது.
  • எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆனது, குவாலியரில் உள்ள BSF அகாடமியில் உள்ள ஆளில்லா விமானப் போர்த் திறம் பயிற்சி (SDW) நிறுவனத்தில் துர்கா ஆளில்லா விமானப் பிரிவு எனப்படும் அதன் முதல் அனைத்து மகளிர் ஆளில்லா விமானப் பிரிவைத் தொடங்கியது.
  • இந்திய இராணுவத்தின் தெற்குப் படைப் பிரிவு ஆனது (புனேவைத் தலைமையிடமாகக் கொண்டது), திரிசூல் எனப்படும் முப்படைப் பயிற்சியின் ஒரு பகுதியாக, ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் அகண்ட் பிரஹார் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதியன்று சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே நடைபெற்ற பேருந்து விபத்தில் 45 உம்ரா இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.
    • உம்ரா என்பது சவுதி அரேபியாவில், குறிப்பாக புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவில் நடைபெறும் ஒரு இஸ்லாமிய யாத்திரை ஆகும்.
  • 16வது வருடாந்திர அகாடமி ஆளுநர்கள் விருதுகளில் அமெரிக்க நடிகர் டாம் குரூஸுக்கு கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
  • சுவீடன் ஆனது தொலைபேசிகள் மற்றும் அட்டைகள் மூலம் நேரடி பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் பணம் செலுத்துவதன் மூலம் உலகின் முதல் பணமில்லா நாடாக மாறியுள்ளது.
  • ஆங்கில டார்ட்ஸ் விளையாட்டு வீரர் லூக் லிட்லர் அவரது 18வது வயதில் உலகின் முதல் இடத்தினைப் பெற்ற இளம் வீரர் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
  • டைட்டன்ஸ் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்கார்பரேட்டட் (TSI) நிறுவனத்தின் 2025–2029 ஆம் ஆண்டு விண்வெளி வீரர் திட்டத்திற்கான விண்வெளி வகுப்பிற்கான விண்வெளி வீரர் தேர்வாளராக நிடடவோலைச் சேர்ந்த கைவல்யா ரெட்டி குஞ்சலா (17) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
    • முன்னதாக சர்வதேச வான்வழி மற்றும் விண்வெளித் திட்டத்தை நிறைவு செய்து ள்ள கைவல்யா 2 தற்காலிக சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்