TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 22 , 2025 5 days 34 0
  • TVS மோட்டார் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், 2025 ஆம் ஆண்டிற்கான CII தர ரத்னா விருதைப் பெற்றுள்ளார்.
  • கொல்கத்தாவின் அறிவியல் நகரத்தின் பருவநிலை மாற்ற கலைக் காட்சிக் கூடமான On The Edge, துபாயில் நடைபெற்ற 27வது ICOM பொது மாநாட்டில் CIMUSET விருதை வென்றது.
  • கூகுள் நிறுவனமானது, உரை, படங்கள், ஒளி, ஒலி மற்றும் குறியீட்டை ஒன்றாக செயலாக்கக் கூடிய ஜெமினி 3.0 என்ற பல்மாதிரி செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • கர்நாடகா மாநில அரசானது, KEOICS உடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட, டிஜிட்டல் கற்றலுக்கான கர்நாடக DSERT பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவியான BUDDH பொருத்தப்பட்ட மலிவு விலையிலான செயற்கை நுண்ணறிவு நுட்பத்திற்குத் தயார் நிலையிலான KEO எனும் கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியக் கடற்படையானது, INS மாஹே எனும் முதல் மாஹே ரக நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலின் சின்னத்தினை வெளியிட்டது என்பதோடு இதில் அந்த மாநிலத்தின் தற்காப்புக் கலை பாரம்பரியத்தைக் குறிக்கும் ஒரு பாரம்பரிய கேரள வாளான உருமி இடம் பெற்றுள்ளது.
    • இந்தக் கப்பலின் முழக்கம் ஆன "Silent Hunters" என்பது ரேடாருக்குப் புலப்படா அதன் திறனையும் விழிப்புணர்வையும் குறிக்கிறது.
  • இந்திய அரசானது, அடிப்படை செயற்கை நுண்ணறிவை (AI) கற்பிப்பதற்கான YUVA AI for ALL என்ற ஓர் இலவச தேசியப் பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தினால் (MeitY) உருவாக்கப் பட்ட ஒரு சுய காலத் தேர்வு அடிப்படையிலான பாடத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்