சிலியின் முன்னாள் அதிபர் மிச்செல் பச்லெட்டுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இந்திரா காந்தி பரிசு வழங்கப்பட்டது.
ஜனதா தளம் (ஐக்கிய) தலைவர் நிதிஷ் குமார் பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றுள்ளார்.
ஒரு சிறிய கரீபியன் தீவு நாடான குராக்கோ, ஆடவர் கால்பந்து போட்டியில் மார்க்யூ போட்டிக்குத் தகுதி பெற்ற மக்கள் தொகை அளவிலான மிகச்சிறிய நாடாக 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
கேப் வெர்டே, ஹைட்டி மற்றும் பனாமா போன்ற பிற சிறிய நாடுகளும் 2026 ஆம் ஆண்டு போட்டிக்குத் தகுதி பெற்ற இதர நாடுகள் ஆகும்.