மதராஸின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் துறைமுகங்களுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (VTMS) உருவாக்கி நிறுவியுள்ளனர்.
VTMS என்பது கப்பல்களின் நிலைகள், வானிலை ஆபத்து முன் எச்சரிக்கைகள் மற்றும் துறைமுகம் அல்லது நீர்வழிகளுக்குள் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கான ஒரு மென்பொருளாகும்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மார்பளவுச் சிலையானது சமீபத்தில் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் திறக்கப்பட்டது.
141 வயதான கிராமா எனும் கலபகோஸ் இராட்சத ஆமை சமீபத்தில் இறந்தது.
இது கலபகோஸ் ஆமைகளின் 15 கிளையினங்களில் ஒன்றாகும் (கலபகோஸ் தீவுகள் - ஈக்வடாரில் உள்ள தீவுக்கூட்டம்).
அமெரிக்காவின் டெக்சாஸின் ஆர்லிங்டனில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டின் உலகின் வலிமையான பெண்மணி என்ற பட்டத்தை ஜம்மி புக்கர் வென்றார்.
இந்திய நாடானது, இரண்டாவது பிராந்திய அணுகல் வாய்ப்பு நிறைந்த டிஜிட்டல் சுகாதார உச்சி மாநாட்டினை (RODHS-2025) புது டெல்லியில் நடத்தியது.
இந்தியப் பிரதமர் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள சஃப்ரான் விமான இயந்திரச் சேவைகள் இந்தியா (SAESI) மையத்தினைத் திறந்து வைத்தார்.
தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடத்தில் அமைக்கப்பட்டுள்ள 77 அடி உயரமுள்ள இராமரின் வெண்கலச் சிலையைப் பிரதமர் திறந்து வைத்தார்.
5வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் தொடங்கின.
நவம்பர் 24 ஆம் தேதியன்று கொண்டாடப் படும் 2வது ஐ.நா. உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம் ஆனது துணிவினைக் கொண்டாடுவதுடன், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஆதரவளிக்க அழைப்பு விடுக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "From Words to Action: A world fit for Conjoined Twins and Children with Disabilities" என்பதாகும்.