TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 5 , 2025 14 hrs 0 min 18 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் 2024 ஆம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதினை தினத் தந்தியின் நிர்வாக ஆசிரியர் T.E.R. சுகுமாருக்கு வழங்கினார்.
  • 26வது இருவாட்சி திருவிழா ஆனது 2025 ஆம் டிசம்பர் 01 தேதியன்று நாகாலாந்தின் கோஹிமாவில் உள்ள கிசாமாவில் உள்ள நாகா பாரம்பரியக் கிராமத்தில் தொடங்கியது.
  • கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) ஆனது அதன் 125 ஆண்டு சேவையைக் குறிக்கும் வகையில் வேலூரில் 2025 ஆம் ஆண்டு மருத்துவமனை தினக் கொண்டாட்டத்தை நடத்தியது.
  • இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் திருவனந்தபுரத்தில் 14வது எகுவெரின் பயிற்சியைத் தொடங்கின.
  • 16 பெட்டிகள் கொண்ட இரயில் பெட்டிகள் தொடரினை 45 நாட்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், திருச்சியில் உள்ள பொன் மலை இரயில்வே பட்டறை முதன்முறையாக வந்தே பாரத் இரயில் பெட்டிகளை சீரமைக்கிறது.
  • டார்ஜிலிங் மாண்டரின் ஆரஞ்சு ஆனது (மேற்கு வங்கம்) அதன் பாரம்பரியம், தரம் மற்றும் பிராந்திய அடையாளத்தைப் பாதுகாக்கும் விதமாக புவிசார் குறியீட்டினை (GI) பெற்றது.
  • இந்தியக் கடற்படையானது, 17A திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட தாராகிரி எனும் நான்காவது நீலகிரி ரக போர்க் கப்பல் மற்றும் மேசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட மூன்றாவது கப்பலைப் பெற்றது.
  • விசாகப்பட்டினம் ஆனது கைலாசகிரி மலை உச்சியில் உள்ள பூங்காவில் நிலத்தில் இருந்து சுமார் 862 அடி (262 மீட்டர்) உயரத்தில் அமைந்த இந்தியாவின் மிக நீளமான கண்ணாடியால் ஆன தொங்கு நடை பாதை பாலத்தினை அறிமுகப் படுத்தியது.
  • டிஜிட்டல் கல்வி மற்றும் கணினி விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக உலக கணினி எழுத்தறிவு தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 02 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் (UNFPA)-இந்திய அமைப்பானது, சர்வதேச மக்கள்தொகை அறிவியல் ஆய்வு ஒன்றியத்திற்கு (IUSSP) நிறுவனங்கள் பிரிவில் 2025 ஆம் ஆண்டு UN மக்கள்தொகை விருதை வழங்கியது.
    • மக்கள்தொகை ஆராய்ச்சி, சான்றுகள் அடிப்படையிலான கொள்கை வகுத்தல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கு IUSSP ஒன்றியத்தின் பங்களிப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்