TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 6 , 2025 19 days 66 0
  • யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) அமைப்பின் 2025–2029 ஆம் காலக் கட்டத்திற்கான நிர்வாகக் குழுவிற்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான INS அரிதாமன் விரைவில் படையில் இணைக்கப்பட உள்ளது.
  • பூடான் மடாலயம் மற்றும் விருந்தினர் மாளிகை ஆகியவற்றினைக் கட்டுவதற்காக வாரணாசியில் இந்தியா ஒரு நிலத்தை வழங்கியுள்ளது.
  • பெங்களூருவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை சபையின் (CSIR) தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (NAL) ஆனது, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹன்சா-3(NG) பயிற்சி விமானத்தின் "உற்பத்தி வடிவினை" அறிமுகப்படுத்தின.
  • டெல்லி தேசிய தலைநகரப் பகுதியில் நஜாப்கர் ஜீல் பகுதியில் முதன்முறையாக ஓர் அரிய ரஸ்டிக் பண்டிங் (கிராமி பறவை) தென்பட்டது.
    • இந்த இனமானது 2025 ஆம் ஆண்டு IUCN புதுப்பிப்பில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனமானது, எட்டு விரைவு ரோந்து கப்பல்களில் (FPVs) மூன்றாவது கப்பலான ICGS அமுல்யாவினை இந்தியக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தது.
    • ICGS அமுல்யா ஆனது மீன்வளப் பாதுகாப்பு, பிரத்தியேகப் பொருளாதார மண்டலக் (EEZ) கண்காணிப்பு, கடத்தல் எதிர்ப்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் தேடல் மற்றும் மீட்பு (SAR) பணிகளுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்