TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 8 , 2025 17 days 73 0
  • மதுரையில் சுதந்திரப் போராட்ட வீரர் வேலு நாச்சியார் பெயரிடப்பட்ட மேலமடை சந்திப்பு மேம்பாலம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப் பட்டது.
  • அலுவலக நேரத்திற்குப் பிறகான வேலை தொடர்பான அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு ஊழியர்கள் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்கு வகை செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனி நபர் மசோதா (துண்டிப்பு உரிமை மசோதா) ஆனது தேசிய காங்கிரஸ் கட்சியின் (NCP) பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஜோக்பானி-பிரட்நகர் உள்ளிட்ட முக்கியப் போக்குவரத்து வழித்தடங்கள் வழியாக இரயில் அடிப்படையிலான வர்த்தக இணைப்பை விரிவுபடுத்துவதற்காக இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் ஒரு பரிமாற்றக் கடிதத்தில் கையெழுத்திட்டன.
  • சமர்கண்டில் நடைபெற்ற 43வது யுனெஸ்கோ பொது மாநாட்டின் போது 2025–2029 ஆகிய காலத்திற்கான யுனெஸ்கோ மனித மற்றும் உயிர்க்கோளக் காப்பகம் (MAB) சபையின் உறுப்பினராக ஓமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • விக்டோரியா பல்கலைக்கழகம் (ஆஸ்திரேலியா) ஆனது 2026 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் குருகிராமில் (அரியானா) அதன் முதல் இந்திய வளாகத்தைத் திறக்க உள்ளது.
    • இது இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) கீழ் அங்கீகரிக்கப் பட்ட முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் வடகிழக்கு இந்தியாவிலிருந்து மீதமுள்ள 5,800 பினீ மெனாஷே யூதர்களை அழைத்து வருவதற்கான திட்டத்தை இஸ்ரேல் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று அங்கீகரித்தது.
    • இந்தத் திட்டத்தில் பயணம், வீட்டு வசதி, எபிரேய பாடங்கள் மற்றும் மதமாற்ற வகுப்புகளுக்கு 90 மில்லியன் ஷெக்கல்கள் (27 மில்லியன் டாலர்) சிறப்பு நிதி ஒதுக்கீடு அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்