TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 9 , 2025 16 days 81 0
  • ஃபினோ பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனமானது, ஒரு சிறு நிதி வங்கியாக (SFB) மாறுவதற்கான முதன்மை ஒப்புதலை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுள்ளது.
    • இது ஒரு சிறு நிதி வங்கியாக மாற்றப்படும் முதல் கட்டண வங்கியாகும்.
  • கூகுள் நிறுவனமானது AI அல்ட்ரா சந்தாதாரர்களுக்காக, ஒரே நேரத்தில் பல கருதுகோள்களை ஆராய்வதற்காக மேம்பட்ட இணையான பகுத்தறிவைப் பயன்படுத்துகின்ற ஜெமினி 3 டீப் திங் மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலகளாவிய அமைதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக வாஷிங்டனில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் FIFA கூட்டமைப்பின் முதல் அமைதி பரிசைப் பெற்றார்.
  • இந்தியா-மலேசியா இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான ஐந்தாவது ஹரிமாவ் சக்தி 2025 பயிற்சி இராஜஸ்தானில் தொடங்கியது.
  • கிராண்ட்ஸ்லாம் ஆஃப் டார்ட்ஸ் இறுதிப் போட்டியில் வென்றதையடுத்து, தனது 18வது வயதில் டார்ட்ஸ் (எறிமுட்கோல்கள்) போட்டியில் உலகின் முன்னணி இடத்தினைப் பிடித்த இளம் வீரர் என்றப் பெருமையை லூக் லிட்லர் பெற்றுள்ளார்.
  • சர்வதேசப் பெரும் பூனை இனங்கள் கூட்டணியின் (IBCA) 19வது உறுப்பினராக ரஷ்யா இணைந்துள்ளது.
  • இந்திய அரசானது, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்யக் குடிமக்களுக்கு 30 நாட்கள் அளவிலான இலவச ஒற்றை-நுழைவு இணையச் சுற்றுலா மற்றும் குழு நுழைவு இசைவுச் சீட்டுக்களை வழங்க உள்ளது.
  • டேவிட் பார்னியாவுக்குப் பிறகு, இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனமான மொசாட்டின் புதிய தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா வழித்தடங்களை உள்ளடக்கிய 738 கி.மீ. தூரப் பாதையில், பாதுகாப்பு நம்பகத் தன்மை நிலை-4 (SIL-4) சான்றளிக்கப்பட்ட மேம்படுத்தப் பட்ட கவாச் 4.0 தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பை இந்திய இரயில்வே நிறுவி இயக்கியுள்ளது.
    • இந்த அமைப்பில் பாதையில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு அலகுகள், இரயிலில் உள்ள சாதனங்கள், ஒளியிழை கம்பி வடங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் அருகமைவு தரவு மையங்கள் ஆகிய ஐந்து துணை அமைப்புகள் உள்ளன.
  • இந்தியாவின் கைவினைஞர்கள் மற்றும் கைவினை மரபுகளைக் கொண்டாடச் செய்வதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையில் தேசிய கை வினைப் பொருட்கள் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
  • மின்காந்த/நுண்ணலை அடுப்பு அடுப்பின் கண்டுபிடிப்பு மற்றும் பயனைக் கொண்டாடுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 06 ஆம் தேதியன்று தேசிய நுண்ணலை அடுப்பு (மைக்ரோவேவ்) தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்