தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் (KKNPP) மூன்றாம் அலகின் ஆரம்ப கால எரிபொருள் நிரப்பலுக்கான அணு எரிபொருளை ரஷ்யாவின் ரோசாட்டம் நிறுவனம் வழங்கத் தொடங்கியுள்ளது.
லாக்மே மற்றும் வெஸ்ட்சைடு சில்லறை விற்பனை நிறுவனங்களின் முன்னாள் தலைவரான சைமன் டாடா சமீபத்தில் காலமானார்.
அருகி வரும் இந்திய நீர் கிழிப்பான் பறவைகளைப் பாதுகாப்பதற்காக BNHS அறிவியலாளர் பர்வீன் ஷேக் 2025 ஆம் ஆண்டு சரணாலய வனவிலங்குச் சேவை விருதை வென்றுள்ளார்.
சம்பல் சரணாலயத்தில் அவரது சமூகம் தலைமையிலான 'நெஸ்ட் கார்டியன்' முன்னெடுப்பு ஆனது பறவைகளின் உயிர்வாழ்வை சுமார் சுழிய நிலையிலிருந்து 60 சதவீதமாக உயர்த்தியது.
ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டின் (Q2 FY26) இறுதியில் இந்தியாவின் மொத்த இணைய சந்தாதாரர் எண்ணிக்கை 1,017.81 மில்லியனாக உயர்ந்தது.
அதில், 44.42 மில்லியன் சந்தாக்கள் கம்பி வட இணைப்புகள் மற்றும் சுமார் 973.39 மில்லியன் இணைப்புகள் கம்பிவடம் சாரா இணைப்புகள் ஆகும்.
ரல்லினா பேரினத்தின் புதிய இனமான கிரேட் நிக்கோபார் கானாங்கோழி இனமானது சமீபத்தில் கிரேட் நிக்கோபார் தீவில் தென்பட்டது என்பதோடுஇது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மூன்றாவது முறையாக தென்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
இந்தப் பறவை ஆனது, பெரும்பாலும் ஈரநிலங்கள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் அடர்த்தியான வெப்பமண்டல மழைக்காடுகளின் அடிவாரப் பகுதிகளில் வாழ்கிறது.