TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 12 , 2025 12 days 85 0
  • பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் (BNHS) அறிவியலாளர் ஃபர்வீன் ஷேக், 2025 ஆம் ஆண்டு சரணாலய வனவிலங்கு சேவை விருதை வென்றுள்ளார்.
  • மாலத்தீவில் நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டின் L. கீர்த்தனா தங்கப் பதக்கத்தினை வென்று உள்ளார்.
  • FIDE சர்க்யூட் 2025 போட்டியில் வென்ற பிறகு, கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியச் சதுரங்க வீரர் என்ற பெருமையை கிராண்ட் மாஸ்டர் R. பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.
  • 2014 ஆம் ஆண்டு SEBI விதிமுறைகளின் கீழ், ராஜ்மார்க் இன்ஃப்ரா இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்டை (RIIT) உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையாக (InvIT) பதிவு செய்வதற்கு இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) முதன்மை ஒப்புதலை வழங்குகிறது.
  • டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) மற்றும் லாக்ஹீட் மார்டின் ஆகியவை பெங்களூருவில் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானத்திற்கான அதிநவீன பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு (MRO) மையத்தினை கட்டமைக்கத் தொடங்கியுள்ளன.
  • 15வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2026-2030) சீனாவின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு குறித்த ஒரு கருத்தரங்கிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமை தாங்குகிறார்.
  • வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிர்த்தின்னி ஆராய்ச்சி மற்றும் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு குறித்த ஆறாவது சர்வதேச மாநாடு நிறைவடைந்தது.
  • சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் உள்ள கொண்டப்பள்ளி கிராமம் ஆனது 2025 ஆம் ஆண்டில் முதல் முறையாக கைபேசி சேவை இணைப்பு மற்றும் மின்சாரத்தைப் பெற்றது.
    • முதல் கைபேசி சேவை கோபுரம் (ஜியோ) 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன், தற்போது 60% வீடுகளில் கைபேசிகள் உள்ளன.
  • நிலத்தடி அமைப்புகளைக் கண்டறிந்து வரைபடமாக்குவதற்கு முப்பரிமாண நிலப் பரப்பு ஊடுருவும் ரேடார் (GPR) கருவியைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் முப்பரிமாண அடிப்பரப்பு வரைபடமாக்கல் தளத்தை ஜெனீசிஸ் இன்டர் நேஷனல் அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது மும்பை, திருவனந்தபுரம், லக்னோ, ஜெய்ப்பூர், கௌஹாத்தி மற்றும் அகமதாபாத்தில் உள்ள அதானி குழும விமான நிலையங்களில் பயன்படுத்தப் படும்.
  • ஆனந்த் அம்பானி உலக மனிதச் சமூக அமைப்பிடமிருந்து உலக மனிதாபிமான விருதைப் பெற்று, இந்த விருதைப் பெற்ற இளம் மற்றும் முதல் ஆசியர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.
    • முன்னோடிகரமான முயற்சியான வன்தாரா மூலம் வனவிலங்கு மீட்பு மற்றும் வளங்காப்பில் அவர் ஆற்றிய தலைமைத்துவத்தினை இந்த விருது அங்கீகரிக்கிறது.
  • வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்காக டிசம்பர் 09 ஆம் தேதியன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Uniting with Youth Against Corruption: Shaping Tomorrow’s Integrity" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்