TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 13 , 2025 11 days 55 0
  • சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான புவி வாகையர் விருதை வென்றுள்ளார்.
  • யூடியூப்பின் இந்திய-அமெரிக்கத தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், டைம் இதழின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவிக்கப் பட்டு ள்ளார்.
  • இந்திய அஞ்சல் துறையானது, கோட்டயத்தில் உள்ள CMS கல்லூரியில் கேரளாவின் முதல் Gen-Z அஞ்சல் அலுவலக விரிவாக்க முனையத்தினைத் திறந்துள்ளது.
  • இந்தியா தனது முதல் மெகாவாட்-மணிநேர (MWh) அளவீட்டில் வெனடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரி (VRFB) எனும் மின் கல அமைப்பினை உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் திறந்து வைத்தது.
  • மூன்று வயது இந்தியச் சிறுவன் சர்வாக்யா சிங் குஷ்வாஹா 2025 ஆம் ஆண்டில் உலகின் இளம் FIDE-மதிப்பீடு பெற்ற சதுரங்க வீரரானார்.
  • பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு FIDE சர்க்யூட் 2025 போட்டியில் வென்று, சைப்ரஸில் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு கேண்டிடேட்ஸ் போட்டிக்கான இடத்தைப் பிடித்தார்.
  • குமாவோன் இமயமலையில் உத்தரக்காண்ட் மாநிலத்தில் சுந்தர்துங்கா பனிப்பாறை பள்ளத்தாக்கில், சுமார் 10,000 அடி உயரத்தில் ஒரு வங்காளப் புலி தென்பட்டது.
  • பம்பாயின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள புதுமை மற்றும் தொழில் முனைவோர் சங்கம் (SINE) ஆனது 250 கோடி ரூபாயுடன் இந்தியாவின் முதல் தொழிற்காப்புடன் இணைக்கப்பட்ட தொழில்நுட்பப புதுமைக்கான துணிகர மூலதன நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் விலங்கு உரிமைகள் மற்றும் வனவிலங்குப பாதுகாப்புக்கான தனது அர்ப்பணிப்புக்காக PETA இந்தியாவின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த நபராகப பெயரிடப்பட்டார்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) கடவுச் சீட்டானது, 184 இடங்களுக்கு பயணம் மேற் கொள்ளும் வசதியுடன் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் 8வது வலிமையான கடவுச் சீட்டாக பெயரிடப்பட்டுள்ளது.
    • 2015 ஆம் ஆண்டில் 42வது இடத்திலிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டானது 2025 ஆம் ஆண்டில் 8 வது இடத்திற்கு உயர்ந்தது.
  • ஹின்டர்லேண்ட் ப்ரூ நடவடிக்கை கீழ் மகாராஷ்டிராவின் வார்தாவில் ஒரு சட்ட விரோத மெபெட்ரோன் உற்பத்தி அலகினை DRI (வருவாய்ப புலனாய்வு இயக்குநரகம்) கண்டுபிடித்துள்ளது.
    • மெபெட்ரோன் என்பது வேதியியல் ரீதியாக 4-MMC (4-மெத்தில்மெத்காத்தினோன்) என்று அழைக்கப்படும் ஒரு செயற்கை ஊக்க மருந்து ஆகும்.
  • ஆஸ்ட்ராஜெனெகா பார்மா இந்தியா மற்றும் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இந்தியாவில் சோடியம் சிர்கோனியம் சைக்ளோசிலிகேட் (SZC) மருந்தினை சந்தைப்படுத்த கூட்டு சேர்ந்துள்ளன.
    • மிகவும் நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் இருதயச செயலிழப்பு நோயாளிகளில் ஹைபர்கலேமியாவை (அதிகப்படியான பொட்டாசியம்) நிர்வகிக்க SZC பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்