சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவில் ஆலியா பட் கோல்டன் குளோப்ஸ் ஹாரிசன் விருதைப் பெற்றார்.
இலக்கியம், கவிதை, இந்திய மொழிகள் மற்றும் படைப்பாக்கம் சார்ந்த தொடர்பு மூலம் அறிவியலை ஊக்குவிப்பதற்காக புது டெல்லியில் விக்யானிகா அறிவியல் இலக்கிய விழா 2025 நடைபெற்றது.
மிகவும் மதிப்புமிக்க சமகால கலை விருதுகளில் ஒன்றான 2025 ஆம் ஆண்டு டர்னர் பரிசினை வென்று, இந்த பரிசை வென்ற முதல் கற்றல் குறைபாடுள்ள கலைஞர் என்ற பெருமையை னெனா கலு பெற்றுள்ளார்.
தி பேங்கர்ஸ் இதழின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த வங்கியாளர் விருதுகள் விழாவில் 'இந்தியாவின் சிறந்த வங்கி' ஆக பாங்க் ஆஃப் பரோடா அங்கீகரிக்கப்பட்டது.
இந்திய இரயில்வே நிர்வாகமானது, அகலப்பாதைகளில் இயங்குகின்ற, நீராவியை மட்டுமே வெளியிடுகின்ற, சுழிய அளவிலான கார்பன் உமிழ்வை உருவாக்குகின்ற இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இரயிலை ஒரு சோதனைத் திட்டமாக தொடங்க உள்ளது.
EB-5 நுழைவு இசைவுச் சீட்டிற்குப் பதிலாக சட்டப்பூர்வ அந்தஸ்து மற்றும் குடியுரிமைக்கான வாய்ப்பினை வழங்கும் "தங்க அட்டை" திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இதில் தனிநபர் விண்ணப்பதாரர்கள் 1 மில்லியன் டாலர் செலுத்தி இதற்கு விண்ணப்பிக்கலாம் அதே நேரத்தில் நிறுவனங்கள் வெளிநாட்டில் பிறந்த ஓர் ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்துகின்றன.
இந்தியா, கடல்சார் போக்குவரத்திற்கான பல்வேறு உதவிகளுக்கான சர்வதேச அமைப்பிற்கான (IALA) 3வது சபை அமர்வை மும்பையில் நடத்தியது.
75 கலங்கரை விளக்கத் தளங்களில் சுற்றுலாவிற்காக என ஒரு டிஜிட்டல் அனுமதிச் சீட்டு வலை தளம் தொடங்கப்பட்டது என்பதோடுஇந்த கலங்கரை விளக்கங்கள் அனைத்தும் தற்போது முழுமையாக சூரிய சக்தியில் இயங்கும் என்ற நிலையில் இது எளிதான இயங்கலை அணுகல் மற்றும் தூய்மையான, நீடித்த நிலையான சுற்றுலாவை ஆதரிக்கின்றன.
கூகுள் மற்றும் தெலுங்கானா மாநில அரசாங்கம் ஐதராபாத்தில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் (T-Hub) புத்தொழில் நிறுவனங்களுக்கான கூகுள் மையத்தினை தொடங்கி உள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சார் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஓராண்டிற்கு இலவச இணை வேலை இடத்தினை இந்த மையம் வழங்குகிறது.