சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு FIH ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா தனது முதல் வெண்கலப் பதக்கத்தை பெற்றது.
ஜெர்மனி அணியானது ஸ்பெயினை வீழ்த்தி இந்த ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது.
பைனான்சியல் டைம்ஸ் குழுமத்தின் வெளியீடான தி பேங்கர் இதழினால் DBS வங்கிக்கு 2025 ஆம் ஆண்டின் உலகின் முன்னணி வங்கி விருது வழங்கப்பட்டது.
ஆஸ்கார் அகாடமி விருதுகள் ஆனது, 2026 ஆம் ஆண்டில் முதன்முறையாக, திறமைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் திரைப்படத்தில் நடிப்புகளை வடிவமைப்பதிலும் நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர்களின் பங்கை அங்கீகரிப்பதற்காக என்று ஒரு பிரத்தியேக நடிகர்கள் தேர்வுப் பிரிவினை அறிமுகப்படுத்த உள்ளது.
டைம் இதழானது, "செயற்கை நுண்ணறிவின் கட்டமைப்பாளர்களை" அதன் 2025 ஆம் ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்து, செயற்கை நுண்ணறிவை உருவாக்கி மேம்படுத்திய தலைவர்களை அங்கீகரித்தது.
ஆசியாவின் முதல் பாதுகாக்கப்பட்ட ராயல் பறவை சரணாலயமான சராய்ச்சுங்கை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதற்காக அசாமில் உள்ள மஜுலி, சராய்ச்சுங் விழாவை நடத்துகிறது.
இது கி.பி 1633 ஆம் ஆண்டில் அஹோம் மன்னர் ஸ்வர்கடேயு பிரதாப் சிங்கால் நிறுவப் பட்டது.
கொல்கத்தாவின் லேக் டவுனில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் 70 அடி இரும்புச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பானது, இத்தாலியின் சமையல் மரபின் பாரம்பரியத்தை மனித குலத்தின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியமாக அதிகாரப்பூர்வமாக சேர்த்துள்ளது என்பதோடுஇது இந்த கௌரவத்தைப் பெறும் உலகின் முதல் தேசிய உணவு வகை ஆகும்.
பாட்னாவில் உள்ள செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்ட கர்பிகாஹியா அனல் மின் நிலையத்தில் இந்தியாவின் முதலாவது மின் அருங்காட்சியகத்தைப் பீகார் மாநிலமானது உருவாக்க உள்ளது.