TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 16 , 2025 4 days 40 0
  • சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது, ஆந்திரப் பிரதேசத்தின் SPSR நெல்லூர் மாவட்டத்தில் உலகின் முதல் தன்னாட்சி கடல்சார் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க உள்ளது.
  • இந்தியக் கடற்படையானது, கொச்சியில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட ஆழ்கடலுக்கான ஆய்வு உதவிகரக் கப்பல்களின் வரிசையில் (DSC) முதல் கப்பலான DSC A20 என்ற கப்பலை படையில் இணைத்தது.
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது குழு II பிரிவில் முதல் பரிசைப் பெற்று, தொடர்ந்து நான்காவது ஆண்டாக தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை வென்றது.
    • மாநில எரிசக்தி திறன் குறியீட்டில் (SEEI–2025) 2024 ஆம் ஆண்டில் 87.25 புள்ளிகளில் இருந்து முன்னேறி 89.25 புள்ளிகளைப் பெற்று, எரிசக்தி திறன் வாரியம் (BEE) வழங்கிய இந்த விருதினைப் பெற்றது.
  • இந்திய அரசாங்கமானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CMMS) வலை தளத்தினைத் தொடங்கியுள்ளது, இது 2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நிகழ்நேரத்தில் நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக டிஜிட்டல் தளமாகும்.
    • இது வீடு/குடும்பப் பட்டியல் & வீட்டுவசதி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட அனைத்துக் கட்டங்களிலும் தரவுகள் சேகரிப்பின் மையப் படுத்தப் பட்ட மேற்பார்வையைச் செயல்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்