TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 17 , 2025 2 days 25 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, தேசிய குவாண்டம் திட்டத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் தேசிய குவாண்டம் தொடர்பு மையமான IITM C-DOT சாம்ஞா டெக்னாலஜிஸ் அறக்கட்டளையைத் துவக்கியுள்ளது.
  • சென்னை பெருநகரப் பகுதி முழுவதும் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ இரயில் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புதிய கடனை அங்கீகரித்துள்ளது.
    • இந்தத் தொகையானது, 2022 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான ADB வங்கியின் 780 மில்லியன் டாலர் பல்பிரிவு நிதி வசதியின் ஒரு பகுதியாகும்.
  • இந்தியக் கடற்படையானது, கொச்சியில் முதன்முதலில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப் பட்ட DSC A20 எனப்படும் ஆழ்கடல் ஆய்வு உதவி கர கப்பலினை இயக்க உள்ளது.
  • பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன் என்றும் அழைக்கப் படுகிறார்) நினைவாக ஒரு நினைவு தபால் தலையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
    • அவர் கி.பி 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் மத்தியப் பகுதிகளை ஆண்ட முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்