கம்பி வடம் சாராத விரிவலை சேவை, கிராமப்புற 5G இணைப்பு மற்றும் தொலைத் தொடர்பு கல்விக்கானப் பங்களிப்புகளுக்காக முதலாவது இந்திய நிறுவனமாக C-DOT, 2025 ஆம் ஆண்டிற்கான IEEE (மின் மற்றும் மின்னணுப் பொறியாளர்கள்) SA பெரு நிறுவன விருதைப் பெற்றது.
ஏகதா 2025 என்பது இந்தியக் கடற்படைக்கும் மாலத்தீவு தேசியப் பாதுகாப்புப் படைக்கும் இடையே மாலத்தீவில் நடைபெற்ற 8வது ஆண்டு இருதரப்பு கடல் சார் பயிற்சியாகும்.
குவாண்டம் பல் கட்டமைப்புகள் மற்றும் குவாண்டம் தகவல் அறிவியலின் கோட்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காக டைட்டாஸ் சந்தா மற்றும் ஸ்திதாதி ராய் ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேசக் கோட்பாட்டு இயற்பியல் மையப் (ICTP) பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது, இந்தியாவில் முதல் முறையாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் NH-45 நெடுஞ்சாலையில் வன விலங்குகளுக்குப் பாதுகாப்பான வகையான சாலையைத் திறந்து வைத்து ள்ளது.
ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (IAS) இராஜ் குமார் கோயல் மத்தியத் தகவல் ஆணையத்தின் (CIC) தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
பதஞ்சலி பல்கலைக்கழகம், கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் ஞான பாரதம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் யோகா மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலான தொகுப்பு மையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக உயரிய குடிமை விருதான எத்தியோப்பியாவின் நிஷான் என்ற கிரேட் ஹானர் விருதைப் பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இந்திய இரயில்வே நிர்வாகமானது, 25 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அதன் அகலப்பாதை வலையமைப்பின் 99 சதவீதத்திற்கும் அதிகமான பாதைகளின் மின்மயமாக்கல் நடவடிக்கையை நிறைவு செய்து உள்ளது.
2019 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 33,000 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பாதை மின்மயமாக்கப்பட்டது.
பெங்களூரு பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா, விலங்குப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தென்னாப்பிரிக்காவிலிருந்து எட்டு வெளிர் முகம் கொண்ட கபுச்சின் குரங்குகளை இறக்குமதி செய்தது.
சபாஜஸ் அப்பெல்லா என்று அறிவியல் பூர்வமாக அழைக்கப்படும் இந்த குரங்குகள், அந்தப் பூங்காவில் மரபணு பன்முகத்தன்மை, இனப்பெருக்கத் திட்டங்கள் மற்றும் நடத்தை மேம்பாட்டினை மேம்படுத்தும்.
பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி, பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் ஆனது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி அன்று அனுசரிக்கப் படுகிறது.