TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 21 , 2025 15 hrs 0 min 7 0
  • கூகுள் நிறுவனம் ஆனது, வணிகர்களுக்கான பண வழங்கீடுகளுக்காக UPI மற்றும் Google Pay உடன் இணைக்கப்பட்டுள்ள தனது முதல் பற்று அட்டையை இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் முதல் பிரத்தியேக வனப் பல்கலைக்கழகம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் நிறுவப்பட உள்ளது.
  • டெஸ்லா நிறுவனமானது, தனது முதல் மின்சார வாகன மின்னேற்ற நிலையத்தினை ஹரியானாவின் குருகிராமில் திறந்துள்ளது.
  • AIIMS விஜய்பூர் வளாகத்தில் தனது முதல் மின்சார வாகன மின்னேற்ற நிலையத்தை திறந்துள்ளதுடன் ஜம்மு-காஷ்மீர் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
  • இந்தியக் கடற்படையானது, கோவாவில் உள்ள INS ஹன்சாவில் INAS 335 ‘Ospreys’ படைப் பிரிவை அதன் இரண்டாவது செயல்பாட்டுப் படைப்பிரிவான MH-60R பல்பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் பிரிவில் இணைத்தது.
  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவை இணைந்து அபுதாபியில் டெசர்ட் சைக்ளோன்-II என்ற கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.
  • பிரேசில் நாடானது 2026 ஆம் ஆண்டிற்கான BRICS அமைப்பின் (18வது) தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் முறையாக ஒப்படைத்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, "இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரக் கையேடு, 2024-25" என்ற அதன் 10வது புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆனது, அதன் முதல் சர்வதேச இந்திய பாணியிலான மல்யுத்த (டங்கல்) போட்டியை 2025 ஆம் ஆண்டு ருஸ்தம்-இ-ஜம்மு காஷ்மீர் போட்டி உடன் நடத்துகிறது.
    • இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது, பாரம்பரியமான டங்கல் மல்யுத்தத்தை மீட்டெடுத்தல், உடற்தகுதியை ஊக்குவித்தல், விளையாட்டு சார் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் உள்ளூர் திறமைகளை வெளிப்படுத்தச் செய்தல் ஆகிய பலவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஓமன் தனது மிக உயரியக் குடிமை விருதான ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளது என்பதோடு இதன் மூலம் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்று உள்ளார்.
    • இது அவர் பெற்ற 29வது சர்வதேச விருதினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்