TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 24 , 2025 14 hrs 0 min 21 0
  • தமிழ்நாட்டின் முதல் பிரத்தியேகமான நாய்கள் பூங்கா உதகமண்டலத்தில் உள்ள ஆர்போரேட்டத்தில் (மரக் கருவூலத்தில்) திறக்கப்பட்டுள்ளது.
  • அடம்யா ரக விரைவு ரோந்து கப்பல்களின் மூன்றாவது கப்பலான ICGS அமுல்யா, கோவாவில் இந்திய கடலோரக் காவல்படையால் படையில் இணைக்கப்பட்டது.
  • அசாமின் கௌஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் இயற்கை கருத்துரு சார் விமான நிலைய முனையத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
  • உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த கோல்ஃப் வீரர் சுக்மான் சிங், உலகின் மிக நீண்ட காலமாக நடைபெறும் அமெச்சூர் (புது நிலை) போட்டியான 124வது அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப் பெற்றார்.
  • சிரியாவில் இஸ்லாமிய அரசின் (ISIS) இலக்குகளுக்கு எதிராக, ஹாக்ஐ ஸ்ட்ரைக் நடவடிக்கை எனும் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல் தொடரினை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
  • குவாட் நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை தங்கள் முதல் களப் பயிற்சியை (FTX) நடத்தின.
    • குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்தில் கிறிஸ்துமஸ் டிராப் நடவடிக்கையின் போது இந்தப் பயிற்சி நடைபெற்றது.
  • டிசம்பர் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக கூடைப்பந்து தினம் 2025 ஆனது, குழுப்பணி, உள்ளடக்கம், இளையோர் மேம்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்காகவும் 1891 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கூடைப் பந்து விளையாட்டைக் குறித்து அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்