கிழக்கு வங்காள FC அணி, நேபாள அணியை வீழ்த்தி, 2025 ஆம் ஆண்டிற்கான முதல் SAFF மகளிர் கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதுடன், இந்தியாவின் முதல் சர்வதேச மகளிர் கிளப் பட்டத்தை வென்றது.
மலையாளப் பதிப்பகமான DC புக்ஸ் நிறுவனத்தின் வெளியீட்டாளரும் நிர்வாக இயக்குநருமான ரவி டீசீக்கு பிரான்சு நாட்டின் கௌரவ விருதான Chevalier de l’Ordre des Arts et des Lettres (Knight of the Order of Arts and Letters) வழங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான NDTV இந்தியன் ஆஃப் தி இயர் விருதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) முன்னாள் செயலாளர் ஜெய் ஷா பெற்றுள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற 4வது BRICS ஷெர்பாக்கள் சந்திப்பின் போது, BRICS நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரேசில் இந்தியாவிடம் ஒப்படைத்ததுடன், 2026 ஆம் ஆண்டில் BRICS அமைப்பினை இந்தியா வழிநடத்த உள்ளது.
மூத்த மலையாள நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஸ்ரீனிவாசன் அவரது 69வது வயதில் காலமானார்.
1941 ஆம் ஆண்டு பியர்ல் துறைமுகத்தில் நடைபெற்ற ஜப்பானியக் குண்டுவெடிப்பில் இருந்து உயிர் தப்பியவர்களில் (குறைந்து வரும் எண்ணிக்கையில்) ஒருவரான இரண்டாம் உலகப் போரின் கடற்படை வீரர் இரா "ஐக்" ஷாப் சமீபத்தில் காலமானார்.
புது டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக சுகாதார அமைப்பின் (WHO) பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டில் அஸ்வகந்தா குறித்த நினைவு அஞ்சல் முத்திரையை இந்தியப் பிரதமர் வெளியிட்டார்.
அஸ்வகந்தா (அமுக்கரா கிழங்கு) என்பது ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் விதானியா சோம்னிஃபெரா அறிவியல் பெயர் கொண்ட ஒரு மருத்துவ தாவரம் ஆகும்.