இந்தியப் பிரதமர் அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள நம்ரூப்பில் 10,601 கோடி ரூபாய் மதிப்பிலான உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தியக் கடலோரக் காவல்படையானது சமுத்திர பிரதாப் என்ற அதன் முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலை (PCV) அறிமுகப்படுத்தியது.
டேராடூனில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபை (ICFRE), சுரங்க நோக்கங்களுக்காக ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பகுதியாக தகுதி பெறும் மலைகள் குறித்து மாவட்ட வாரியான அறிக்கையைத் தயாரிக்க உள்ளது.
இராஜஸ்தான் சட்டமன்றச் சபாநாயகர் ஸ்ரீ வாசுதேவ் தேவ்னானி எழுதிய "Sanatan Sanskriti Ki Atal Drishti" என்ற புத்தகத்தை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார்.