குவைத் நாடானது, அதன் பொருளாதார பன்முகப்படுத்தல் உத்தியின் ஒரு பகுதியாக பிராந்திய மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் அதன் பங்கை அதிகரிக்கும் நோக்கில் பௌபியன் தீவில் முபாரக் அல்-கபீர் துறைமுகத்தை கட்டமைப்பதற்காக சீனாவுடன் 4.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், உலகளவில் பொருளாதாரத் தடைகளின் அதிகரித்து வரும் பயன்பாடு குறித்து "The Great Sanctions Hack" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
டெக் மஹிந்திரா குளோபல் செஸ் லீக் (TechM GCL) 2025 என்றும் அழைக்கப்படும் 3வது உலக சதுரங்கப் போட்டியில் (GCL 2025) ஆல்பைன் SG பைப்பர்ஸ் அணி வெற்றி பெற்று உள்ளது.
புது டெல்லி (டெல்லி) முழுவதும் 100 இடங்களில் ஒரு தட்டுக்கு 5 ரூபாய் என்ற மானிய விலையில் உணவு வழங்குவதற்காக என டெல்லி அரசு “அடல் உணவகத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது.