இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த P.V. சிந்து, பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) தடகள ஆணையத்தின் 2026–2029 ஆம் கால கட்டத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா பிரிவினைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அனு கார்க், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் ஒடிசாவின் முதல் பெண் தலைமைச் செயலாளராக பதவியேற்க உள்ளார்.
அதானி விமான நிலையங்களால் உருவாக்கப்பட்ட புதிய பசுமை விமான நிலையமான நவி மும்பை சர்வதேச விமான நிலையம் (NMIA) வணிக ரீதியான விமான சேவை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
ஜோஹோ நிறுவனத்தின் ஆதரவு பெற்ற புத்தொழில் நிறுவனமான VoxelGrids, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் காந்த அதிர்வு அலை வரைவு (MRI) ஸ்கேனர் இயந்திரத்தினை உருவாக்கியுள்ளது.
இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) ஆனது, மும்பை கடற்கரையில் எண்ணெய் கசிவுத் தணிப்பு நடவடிக்கைக்கான தயார்நிலையை பரிசோதிக்க பிராந்திய அளவிலான மாசு எதிர்ப்புப் பயிற்சியை (RPREX-2025) நடத்தியது.
சீனா சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில், உலகின் மிகவும் நீளமான அதி விரைவுச் சாலை சுரங்கப்பாதையாக அமைந்த 22.13 கிமீ நீளமுள்ள தியான்ஷான் ஷெங்லி சுரங்கப்பாதையைத் திறந்துள்ளது.
இது வடக்கு மற்றும் தெற்கு ஜின்ஜியாங்கைப் பிரிக்கும் தியான்ஷான் மலைத் தொடரின் வழியாக செல்கிறது.
பரம் ருத்ரா மீக்கணினி ஆனது பாட்னாவின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் திறக்கப்பட்டது.
இது தேசிய மீக்கணினித் திட்டத்தின் (NSM) கீழ் பீகாரில் உள்ள முதல் மீக்கணினி மையம் ஆகும்.
அசாமின் ஜோர்ஹாட்டைச் சேர்ந்த ஐஷி பிரிஷா போரா, நிலைத்தன்மை மற்றும் கழிவு குறைப்பை ஊக்குவிக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவரது பணிக்காக 2025 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதைப் பெற்றார்.
முன்னதாக அவர் 2022 ஆம் ஆண்டில் INSPIRE MANAK (Inspiration in Science Pursuit for Inspired Research - Million Minds Augmenting National Aspirations and Knowledge) மாநில விருதை வென்றார்.